RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.


உரும்பிராய்யைப் பற்றி சில

உரும்பிராய்
யாழ்ப்பாணத்திற் பழைமையும், பெருமையும் வாய்ந்த பதிகளுள் ஒன்றாக விளங்குவது உரும்பிராய். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லை மத்தியாகக் கொண்டு இக் கிராமம் அமைந்திருக்கிறது.
இக்கிராமத்துக்கு உரும்பிராய் என்று பெயர் வரக்காரணம் யாது எனப் பலரும் வினாவுவதுண்டு. இடப்பெயர் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இவ்வூருக்கான பெயரின் காரணம் நன்கு விளக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருகாலத்தில் வழிபோக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. வாகன வசதி மிகமிகக் குறைந்திருந்த காரணத்தினால் நெடுந்தூரம் நடந்தே தமது பிரயாணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டிருந்தது. பிரயாணம் செய்பவர்கள் மரநிழல்களில் தங்கிச் சிறிது களைப்பாறிய பின்னர் பிரயாணத்தை மேற்கொள்ளுவர். மேற்கொள்ளுவார். பொருள்களைப் பொதியாகக் கட்டித் தலைச் சுமையாகவே கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இப்பொழுதும் அந்தக் காட்சியை நாம் அவதானிக்கலாம் சுமந்து செல்லும் பிரயாணிகள் பிறருடைய உதவியின்றியே பொதிகனைச் சுமை தாங்கியில் வைத்து விட்டுச் சிறிது சேரம் ஆறிச் செல்வதுமுண்டு. எந்தச் சுமைகளையும் தாங்கும் சக்தி அந்தச் சுமைதாங்கிகளுககு எண்டு. ஆரம்பத்தில் வைரக் கற்களினாலும் பின்னர் சீமெந்து கொண்டும் உறுதியாகச் சுமைதாங்கிகளை நிறுவினார்கள் அப்படியான பழைய சுமைதாங்கிகளை இன்றும் சில இடங்களில் தெருவோரங்களிற் காணலாம்.
மேலே கூறியவாறு நிழல் தரு மரங்களுள் ஒன்றான பிராய் (பராய் என்றும் சொல்வதுண்டு) மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. நன்றாகச் செழித்துப்படர்ந்து வளரக்கூடிய இம்மரத்துக்குப் பெருஞ்சூலி மரம் என்று இன்னொரு பெயருமுண்டு. ஆல், அரசு போல இதுவும் பால் உள்ள மரம்.
தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே எங்கள் கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். எண்களைக் குறிப்பதற்கு அந்தக் காலத்தில் எழுத்து எண்களையே உபயோகித்தார்கள்;. நாவலர் பெருமான் அவர்கள் எழுத்து எண்களையே அவர் சம்மந்தப்பட்ட நூல்களில் உபயோகித்திருக்கின்றார். நாவலர் பெருமானுக்குப் பின்வந்தவர்களும் எழுத்து எண்களை உபயோகித்திருக்கின்றார்கள். இங்கே நாட்டப்பட்ட பிராய் மரத்தில் இலக்கமும் எழுத்து எண்களைக் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று ஊகித்துணர முடிகின்றது.
இருபத்தைந்தாம் பிராய் என்பதனை 25ம் பிராய் என்று இக்காலத்தில் எழுதுவார்கள். அப்பொழுது எழுத்து முறையையே கையாண்டு.
உரும்பிராய் என்று எழுதி இருப்பார்கள்.
உ- 2ƒ ரு - 5
உரும்பிராய் - 25ம் பிராய்
என்பதற்கு ஈடாகும்.
இருபத்தைந்து என்ற எண்களைக் (25) குறித்த எழுத்துக்களை ‘உரு” என்றும் அயலில் ம் என்ற எழுத்தையுஞ் சேர்த்து உரும் என்றும், அப்பால் பிராய் என்னும் மரப்பெயரையும் சேர்த்து
உரும்பிராய்
என்றும் காலக் கிராமத்தில் வாசிக்கும் வழக்கை ஏற்படுத்தி இருக்கலாம் எழுத்து இலக்கத்தோடு கூடிய மரப்பெயர் (பிராய்) ஊர்ப்பெயராக மாறி இருக்கலாம் என்பதே எனது சிந்தனையில் எழுந்த அபிப்பிராயமாகும்.
பேச்சுவழக்கில், எழுத்து வழக்கில் உரும்பிராய், உறும்பிராய், உடும்பிராய் என்றும் கையாளுகின்றார்கள். அவ்வாறு பேசுவதற்கோ எழுவதுவதற்கோ தக்க சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
கட்டைப்பிராய், வேலம்பிராய், மானம்பிராய், தம்பிராய் என வழங்கும் இடங்களும் இருக்கின்றன. அந்தந்த இடங்களைச் சார்ந்த அறிஞர்கள் அந்த இடப்பெயர்கள் குறித்து வேறு விளக்கங்கள் கொடுக்ககூடியதாகவுமிருக்கலாம்.
முன்னர் கூறியவண்ணம் பிராய், பராய், என்னும் இரு சொற்களும் பிராய் மரத்தையே குறிப்பன. எனினும் உரும்பிராய் என்ற உபயோகத்திலும் பார்க்க உரும்பிராய் என்ற பிரயோகமே சிறந்ததாகத் தெரிகின்றது. அப்பொழுது அரசகரும மொழியாக இருந்த ஆங்கிலத்தில்
URUMPIRAI
என்றே வழங்கப்பட்டிருக்கின்றது. கச்சேரி தபாற்கந்தோர் கிராமசேவையாளர் பிரிவு முதலான ஸ்தாபனங்களிலும் URUMPIRAI என்றே வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கான தமிழ்த் தொடரும் உரும்பிராய் என்றே அமைந்திருக்கின்றது.
சிலர் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது URUMPIRAI என்னும், தமிழில் எழுதும் பொழுது உரும்பராய் என்றும் எழுதுவதுமுண்டு
URUMPIRAI - உரும்பிராய்
என்று முறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுவதே பொருத்தமானதாகும்.
கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும் மேற்கே இணுவில் உடுவிலும் வடக்கே ஊரெழு நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கொண்ட இக்கிராமத்தில் 3753 குடம்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள். இத்தொகை இப்பொழுது கூடியிருக்கலாம்.
அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ்பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம் கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம், என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகள்.
ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கிருந்தன. பின்னர் உரும்பிராய் ஊரெழு ஆகிய கிராமங்கள் 01.07.1967இல் பட்டணசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகிழக்குப் பிரதேச சபையின் உபபிரிவாக இயங்கி வருகின்றது.

பெருபான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவர்கள் பிற்காலத்திற் சைவசமயத்தினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள் அவர்களில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸதாந்து சமயத்தையும் (அங்கிலிக்கன் சபை) தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது.

புலவர்மணியின் வாயில்-உரும்பிராய்
நாவலர் காவிய பாடசாலையில் சுன்னாகம் ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்களிடம் ஒரே காலத்திற் பாடங் கேட்வர்களில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்றவர்கள் இருவர். வடக்கே பண்டிதமணி அவர்கள்ƒ கிழக்கே புலவர்மணி அவர்கள் தம்மைப் பற்றியும் சகபாடியான பண்டிதமணி அவர்களைப் பற்றியும் புலவர்மணி அவர்கள் குறிப்பிடும் போது ‘ஒரே கிளையில் ஒரே காலத்தில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள் என்பார். இருவர் பெரியார்களும் உரும்பிராயின் மீது அளவுகடந்த பற்று உடையவர்கள்
உலகறிந்த கவிஞர்களில் ஒருவரான மட்டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் உரும்பிராயின் சிறப்புக் குறித்து எடுத்தியம்பும் பான்மை இனிக்க வைக்கின்றது.
உலகறிந்த பேரறிஞர்
பலர் பிறந்த சீருர்
உண்மை வளர் நூல்கள் பல
படைத்தோர் வாழ்ந் துயரூர்
நிலவுலகும் வானுலகும் நீண்ட
புகழ்ப் பேரூர்
நிலைகலங்காத் தமிழ் வீரம்
நிலைநாட்டும் நிறையூர்
பலகலையும் வளர்த்து நன்கு
வாழுமரும் பொரு @ர்
பரமனடித் தொண்டு புரிந்
தேத்து திருவரு @ர்
அலகில்புகழ் யாழ்ப்பாண அன்னை
திரு முகத்தில்
அணிதிலகம் போன் றிலங்கும்
உரும்பிராய்த் திருவூர்.

நன்றி
ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992



பழம் கேட்டாள் ஒளவை
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
கேட்டான் முருகவேள்

பாடல் கேட்டான் முருகன்
சுட்ட கவிதை வேண்டுமா?
சுடாத கவிதை வேண்டுமா?
கேட்டாள் ஒளைவைப் பாட்டி.


இதயமிலா சிந்தனை
உன் இதயத்தில் என் சிந்தனையில்லை
உன் சிந்தனைக்கு ஏதோ இதயமில்லை
உன் மனதில் என் சுவடுகள் இல்லை
என் மனமெல்லாம் வடுக்கள் நிறைந்தன.
..
உன் நெஞ்சில் ஏனோ ஈரமில்லை
என் நெஞ்செல்லாம் பாரம் நிறைந்தது
உன் கனவில் ஏனோ நான் இல்லை
என் கனவெல்லாம் நீயே என்றானாய்
 
Copyright 2009 kokularajan.tk. All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates